புதுசு

அபுதாபியில் டிச.1 முதல் 500 திர்ஹத்திற்கான போக்குவரத்து அபராதம் அறிமுகம்!அபுதாபியில் டிசம்பர் 1 முதல் 500 திர்ஹத்திற்கான போக்குவரத்து அபராதம் அறிமுகம்.

அமீரகமும் அபராதங்களும் பிரிக்க முடியாதவை (போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படுபவை). எதிர்வரும் டிசம்பர் 1 முதல் கூடுதலாக ஒரு பட்டி, டிங்கரிங் பார்க்கப்பட்டு மறுஅவதாரம் எடுத்துள்ள அபராதம் அறிமுகமாகிறது.

மிகச்சிறிய வாகன விபத்து (minor traffic accidents), டயர் வெடித்தல் (tyre bursts) மற்றும் பிரேக் பிடிக்காத (sudden breakdowns) காரணங்களால் சாலையில் நின்று போகும் வாகனங்களை உடனடியாக போக்குவரத்தை பாதிக்காத வகையில் சாலையோரம் ஒரங்கட்ட வேண்டும் இல்லாவிட்டால் போக்குவரத்து சட்ட விதி எண்: 98/2017 படியும், அமைச்சரவையின் தீர்மான எண் 178 படியும் 'எந்த வகையிலும் போக்குவரத்திற்கு தடங்கல் ஏற்படுத்துதல்' (obstructing traffic in any way) என்ற சட்டத்தின் கீழ் 500 திர்ஹம் அபராதம் கட்ட நேரிடும்.

Source: Khaleej Times
தமிழில்:ADIRAI news

No comments