புதுசு

மூன்று நிமிடங்களில் 10,000 கோடி அள்ளிய ஆன்லைன் அலிபாபா
உலகின் முன்னனி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனம் 3 நிமிடங்களில் 10,000 கோடி மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்து சாதனைப்படைத்துள்ளது.
சீனாவின் முன்னனி வர்த்தக நிறுவனம் அலிபாபா. இதில் 11/11 தேதி அன்று ஆண்டுதோறும் ’ ‘சிங்கிள்ஸ் டே’ எனும் மெகா ஆன்லைன் விற்பனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் 3 நிமிடங்களில் 10,000 கோடிக்கு விற்பனையானது. 15 நிமிடத்தில் 32,000 கோடிக்கு விற்பனை செய்து அசத்தியுள்ளது.
சிங்கிள்ஸ் டே என்பது திருமணமாகாத, இளைஞன், இளைஞிகள் பயன்பெறும் வகையில் இந்த மெகா வர்த்தகம் நடைப்பெற்றது. இதில், அலிபாபா நிறுவன வாடிக்கையாளர்கள் 97% பேர் மொபைல் மூலமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

No comments