புதுசு

டெல்லி-சண்டிகர் இடையே ரூ.11,000 கோடி செலவில் அதிவிரைவு ரயில் திட்டம்
டெல்லி-சண்டிகர் இடையிலான 245 கிலோமீட்டர் தூரத்தை இரண்டே மணி நேரத்தில் கடக்கும் அதிவிரைவு ரயில் திட்டம் குறித்து பிரான்ஸ் அரசுடன் ரயில்வே அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரன் வரும் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா வர உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிவிரைவு ரயில் திட்டத்திற்கான மொத்த செலவு 11,000 கோடி ரூபாய் என்று திட்டமதிப்பீடு செய்யப்பட்டு 1700 பக்க ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே சென்னை-ஹைதராபாத், சென்னை- மைசூர், டெல்லி-கான்புர் உள்ளிட்ட ஏழு வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடிய செமி ஹை ஸ்பீடு திட்டத்தின் கீழ் மாதிரிக்காக டெல்லி-சண்டிகர் ரயில் வழித்தடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாதிரிக்காக டெல்லி-சண்டிகர் ரயில் வழித்தடம் தேர்வானாலும், நாட்டில் பரபரப்பாக இயங்கக் கூடிய சென்னை-ஐதராபாத், மைசூரு-சென்னை, மும்பை-கோவா, டெல்லி-கான்பூர், நாக்பூர்-செகந்திராபாத் உள்ளிட்ட 4 ஆயிரம் கிலோ மீட்டர் நீள ரயில்வழித்தடங்களில் வேகம் மேம்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments