புதுசு

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு 1200 க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை!46வது அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு 1200 மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் தேதி 46வது அமீரக தேசிய தினம் கொண்டாடப்படுதை முன்னிட்டு துபை மற்றும் அபுதாபி எமிரேட்டுகளில் சுமார் 1200 மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

அமீரக ஜனாதிபதியும் அபுதாபி எமிரேட்டின் ஆட்சியாளருமான ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவின் பேரில் அபுதாபி சிறைகளிலிருந்து 645 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்..

அதேபோல், அமீரக துணை ஜனாதிபதியும், பிரதமரும், துபை எமிரேட்டின் ஆட்சியாளருமாக ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் உத்தரவின் பேரில் துபை சிறைகளிலிருந்து 606 கைதிகள் விடுதலையாக உள்ளனர்.

Source: Gulf News
தமிழில்:adirai news

No comments