புதுசு

ஜி.எஸ்.டி., வருவாய்; தமிழகத்துக்கு 2வது இடம்
ஜி.எஸ்.டி., வருவாயில், தேசிய அளவில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது,'' என, வணிகவரித் துறை அமைச்சர், வீரமணி கூறினார்.
இது குறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி., வருவாயில், தேசிய அளவில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜி.எஸ்.டி., செலுத்துவதில், தமிழகத்தில், 89 சதவீதம் பேர், தங்களை பதிவு செய்துள்ளனர். இன்னும், 11 சதவீதம் பேர் பதிவு செய்யாமல் உள்ளனர்.
அவர்களும் பதிவு செய்து கொள்ளும் வகையில், இரண்டு மாத அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. அதற்குள் அவர்கள், இணைந்து கொள்ள வேண்டும். வணிக வரித்துறை, அவர்களுக்கு தக்க ஆலோசனை வழங்கி, உதவிகளை செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments