புதுசு

இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு 20 மடங்கு அதிகம்
இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 மடங்கு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் புள்ளிவிபர அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2010 ம் ஆண்டு முதல் 2017 ம் ஆண்டு அக்டோபர் வரை பன்றிக்காய்ச்சலால் இந்தியாவில் 8,543 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பன்றிகாய்ச்சல் பாதிப்பு 20 மடங்கு அதிகரித்துள்ளது

கடந்த 7 ஆண்டுகளில் 1.14 லட்சம் பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 23,812 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 716 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் 18,206 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளது. 431 பேர் பலியாகி உள்ளனர். ராஜஸ்தானில் 13,158 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பும், 235 பேர் இதனால் பலியாகியும் உள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படாத பகுதிகளாக சிக்கிம் மற்றும் லட்சத்தீவே உள்ளன. 2017 ல் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லாத பகுதிகளாக மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், லட்சத்தீவு மட்டுமே உள்ளன.

No comments