புதுசு

துபை - ஷார்ஜா இடையே 200 மில்லியன் திர்ஹத்தில் புதிய மேம்பாலம் !


ஷார்ஜா துபை இடையே நிலவும் வாகனப் போக்குவரத்து நெரிசலில் சிக்கியவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் தலைவலி. இந்த இரு எமிரேட்டுகளிடையே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல்வேறு திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்படுகின்றன என்றாலும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், ஷார்ஜாவின் அல் பதியா பகுதியில் சுமார் 200 மில்லியன் திர்ஹம் செலவில் 9 வழிப்பாதை கொண்ட புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலம் எதிர்வரும் 2018 ஆகஸ்ட் மாதம் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போதைய வாகனப் போக்குவரத்தான மணிக்கு 9,900 என்ற எண்ணிக்கையிலிருந்து மணிக்கு சராசரியாக 17,700 வாகனங்கள் என்றளவில் சீரிய வாகனப் போக்குவரத்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய பாலம் எமிரோட்ஸ் ரோடு மற்றும் மலீஹா நெடுஞ்சாலைகளுக்கிடையே அமையவுள்ளது. எமிரேட்ஸ் ரோட்டை நோக்கிச் செல்லும் பகுதியில் 6 லேன்களும், ஷார்ஜா – மலீஹா இடையே 3 லேன்கள் என மொத்தம் 9 லேன்கள் இந்த மேம்பாலத்தில் அமைக்கப்பட உள்ளன.



Source: Gulf News

No comments