புதுசு

எகிப்தில் பயங்கரவாத தாக்குதலில் 235 பேர் மரணம்

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தின் தலைநகர் 'அல் அரீஸ்' அருகே 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள 'பிர் அல் அபத்' என்ற ஊரில் வெள்ளிக்கிழமை அன்று அல் ரவ்தா என்ற சூஃபி பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது முகமூடி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 235 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 130க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இக்கொடூர தாக்குதலை நிகழ்த்திய மிருகங்கள் யார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை, மேலும் நிராயுதபாணி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவும் இல்லை. எனினும், தீவிரவாதிகளின் வாகனங்களை விமானப்படை மூலம் குண்டு வீசி அழித்ததாக எகிப்து ராணுவம் தெரிவித்துள்ளது.

அப்துல் பத்தாஹ் அல் ஸிஸி என்ற முன்னாள் ராணுவத் தளபதியும் இன்றைய எகிப்து ஜனாதிபதியுமான பயங்கரவாதிகளை பழி தீர்ப்பேன் என சூளுரைத்துள்ளார். அமீரகம் சவுதி உட்பட பல்வேறு உலக நாடுகளும் வன்மையாக கண்டித்துள்ளன.

சூஃபி குழுவினரின் பள்ளியின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து அரசு, ரஷ்யா, இஹ்வான் அமைப்பு, ஐஎஸ்ஐஎஸ் அல்லது குழப்பம் விளைவிக்கும் நோக்குடன் வேறு யாரோ செயல்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.

ஏனெனில் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் எத்தனையோ அதிபயங்கர விஷயங்கள் மக்களை சென்றடையாமல் திசைதிருப்பும் உத்திகளாக அல்லது சம்பந்தப்பட்ட அரசுகள் செய்யப்போகும் ஏதோ ஒரு தீவிரவாதத்திற்கு நியாயம் கற்பிக்க செய்யப்படும் முன்னேற்பாடாக பல உலகநாடுகளால் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதும் கசப்பான உண்மை.

Source: Gulf News

No comments