புதுசு

28 கிலோ எடையில் குழந்தை ~ தடுமாறும் மருத்துவர்கள்

 மெக்ஸிக்கோ நாட்டின் கோலிமா மாநிலத்தை சேர்ந்த மரியோ கொன்சாலஸ் - இஸபெல் பொன்டிஜா தம்பதியினருக்கு 2 வது மகனாய் பிற குழந்தைகளைப் போலவே சுமார் 3.5 கிலோ எடையுடன் பிறந்தான் லூயிஸ் மானுவெல் கொன்சாலஸ்.

லூயிஸ் இரண்டே மாதங்களில் 10 கிலோவாக அதிகரித்தான் பின்பு 10வது மாதத்தில் இன்னும் 18 கிலோ கூடியதால் மொத்தம் 28 கிலோவாக எடை கூடியது. ஆரம்பத்தில் தாய் இஸபெல்லுக்கோ தனது மகன் நன்றாக தாய்ப்பால் அருந்துவதால் தான் எடை கூடியுள்ளான் என பூரித்துப் போயிருந்தார்.

மரியோ - இஸபெல் தம்பதியினரின் 3 வயது முதலாவது மகன் லூயிஸ் முன்பு குள்ளனாக தெரிய, மருத்துவர் மருத்துவர்களாய் தேடி ஓடினர். இன்று வரை குழந்தையின் உடல் அசூர வளர்ச்சியடைந்ததன் காரணத்தை யாருமே கண்டுபிடிக்கவில்லை. பொதுவாகவே, மெக்ஸிகோ நாட்டில் தான் உலகளவில் உடல்பருத்த மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் என்ற புள்ளிவிபரங்கள் வேறு தந்தியடிக்கின்றன.

ஒருவழியாக, மரபணு கோளாரால் ஏற்படும் Prader-Willi Syndrome, (a genetic condition in which children have an insatiable appetite and weak muscle tone) என்ற அல்லது கற்ப காலத்தில் தாய்க்கு ஏற்பட்ட ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கலாம் என்று கணித்துள்ள மருத்துவர்கள் இந்த அதீத உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்த 555 டாலர் பெறுமானமுள்ள ஊசி மருந்தை பரிந்துரைத்துள்ளனர் ஆனால் விவசாயியான தந்தையின் வருமானமோ மாதத்திற்கு 200 டாலர் பெறுமான மெக்ஸிகோ துட்டு மட்டுமே.

தவழ, நடக்க இயலாத குழந்தையால் பிறர் துணையுடன் சற்று உட்காரவே இயலுமாம் மேலும் பெற்றோர்களாலேயே தூக்க முடியாத குழந்தை லூயிஸின் ஸ்ட்ரோலர் வண்டி கூட எடை அதிகரிப்பால் முறிந்துவிடுமோ என அச்சப்படுகின்றனர். இன்னொருபுறம் குழந்தையின் ஆயுள் இடைநின்றுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் பெற்றோர்களை வாட்டிவருகின்றது.Source: AFP

No comments