புதுசு

துபையில் 3 நாள் SUPER SALE எனும் தள்ளுபடி விற்பனை !
துபையில் 2 வது ஆண்டாக 3 நாள் சூப்பர் சேல் எனும் தள்ளுபடி விற்பனை நடைபெற உள்ளது.

துபையில் கடந்த வருடம் ஒவ்வொரு வர்த்தக நிறுவனங்களும் தனித்தனியாக அறிவித்து வந்த தள்ளுபடி விற்பனைகளை ஒருமுகப்படுத்தி, சுற்றுலா பயணிகளும் உள்ளூர்வாசிகளும் பயன்பெறும் விதத்தில் வருடத்திற்கு 2 முறையென சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் திருவிழாவை துபை அரசின் திருவிழாக்கள் மற்றும் சில்லரை வர்த்தகக் கழகமும், துபை சுற்றுலா மற்றும் வர்த்தக சந்தைப்படுத்தலுக்கான கழகமும் இணைந்து நடத்தி வருகின்றன.

அதன்படி, எதிர்வரும் நவம்பர் 23 முதல் 25 ஆம் தேதி வரை சுமார் 1,500க்கு மேற்பட்ட விற்பனையகங்களுடன் 400க்கு மேற்பட்ட புகழ்பெற்ற பிராண்டு பொருட்கள் 30 முதல் 90 வரையிலான சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறவுள்ளது.

இந்த சூப்பர் சேல் தள்ளுபடி விற்பனைத் திருவிழா துபையின் அனைத்து மால்களிலும் உள்ள முக்கியமான ஸ்டோர்கள், டிப்பார்ட்பென்டல் ஸ்டோர்கள், ஒருங்கிணைந்த விற்பனை மையங்கள் அனைத்தும் பங்குபெற உள்ளன.

துபையின் 2018 வருடத்திய முதற்கட்ட சூப்பர் சேல் எதிர்வரும் மே மாதம் நடைபெறும். தொடர்ந்து இதேபோல் 2 ஆம் கட்ட சூப்பர் சேல் நவம்பரில் நடைபெறும்.


நன்றி :அதிரை நியூஸ்

No comments