புதுசு

தமிழகத்தில் 3 வேளாண் ஆராய்ச்சி மையங்களை மூட திட்டம்?
தமிழகத்தில் 3 வேளாண் ஆராய்ச்சி மையங்களை மூட மத்திய வேளாண்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் சென்னையில் உள்ள இறால் ஆராய்ச்சி மையம் முதலில் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகம் வரும் 27ம் தேதி முடிவு எடுக்க உள்ளது வேளாண்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்டியலில் உள்ள கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தின் 

எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 103 ஆராய்ச்சி மையங்களை வேளாண்துறை நடத்தி வருகிறது. 103 மையங்களை 60 ஆகக் குறைக்க வேளாண்துறைக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த நிபுணர் குழுவின் பரிந்துரை தொடர்பாக மத்திய வேளாண்துறை வரும் 27ம் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments