புதுசு

இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 3-வது முறையாக முதலிடம்
இந்திய அளவில் உடல் உறுப்பு  தானத்தில் தமிழகம் 3-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான பரிசை டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதை பெறவுள்ளனர். உடல் உறுப்பு தானம் என்பது நோயுற்று உடலுறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவர், மற்றொருவருக்கு அந்த உடல் உறுப்பை தானமாக அளிப்பதாகும். மேலும், ஒருவர் உயிருடன் இருந்தாலும் அவருடைய மூளையின் பகுதி பாதிப்படைந்து செயல் இழக்கும் நிலையில் அவருடைய இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கியமான உடல் உறுப்புகள் அவருடைய வாரிசுதாரர்கள் விரும்பினால் மற்றவர்களுக்குத் தானம் செய்யலாம். 

இந்த உடல் உறுப்புகள் தானத்தால் பலர் உயிர் வாழ வழி வகுக்கும் என்பதால் உடல் உறுப்பு தானம் செய்வது மிகவும் முக்கியமானதாகும். தமிழகத்தில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு உள்ளதால் ஜாதி, மத பேதமின்றி மாநிலம் தாண்டி, இந்திய எல்லைகளைக் கடந்தும் உடல் உறுப்பு தானம் தமிழகத்திலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை 1056 இறந்தவர்களிடம் இருந்து 5933 முக்கிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் உடல் உறுப்பு  தானத்தில் தமிழகம் தொடர்ந்து 3-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. அதேபோல்  உடல் உறுப்பு அறுவை சிகிச்சையில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments