புதுசு

அமெரிக்காவிலும் ஒரு பேரறிவாளன்... 50 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை!


 

அமெரிக்கா, லூசியானாவில் 1971 ஆம் ஆண்டு நர்ஸ் ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞர் வில்பெர்ட் ஜோன்ஸ் என்பவர் தனது 65 வது வயதில் 2,000 டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சுமார் 50 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துவிட்ட வில்பெர்ட் ஜோன்ஸின் அப்பீல் வழக்கை விசாரித்த நீதிபதி, அரசுத்தரப்பு வில்பெர்ட் ஜோன்ஸிற்கு எதிரான சாட்சியங்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியுள்ளதாக தெரிவித்தார். இதைச் சொல்ல நீதிமன்றத்திற்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு நிகழ்ந்ததும் கிட்டதட்ட இதேபோல் தான். அவருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கையை தயாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி திரு. தியாகராஜன் அவர்கள் கூட பணி ஓய்வுக்குப் பின் தன் மனசாட்சி உலுக்கியதால், பதின்மப் பருவத்தில் இருந்த பேரறிவாளன் அறியாமல் செய்த தவறை அறிந்தே செய்ததாக எழுதினேன் என ஒப்புதல் தெரிவித்த பின்னரும் கொட்டடியில் முழுவாழ்வையும் தொலைத்து விட்டார் என்பதை பார்க்கின்றோம். பேரறிவாளன் மட்டுமல்ல பல அப்பாவி கோவை மற்றும் கோத்ரா சிறைவாசிகளின் கதையும் இதுதான்.

http://tamil.thehindu.com/india/article20443588.ece?homepage=true

Source: AFP / Emirates 247

No comments