புதுசு

அமீரக புஜைராவில் போக்குவரத்து அபராதம் 50% தள்ளுபடி அறிவிப்பு !
அமீரகத்தின் துபை, அபுதாபி, அஜ்மான், ராஸ் அல் கைமா உட்பட பல எமிரேட்டுகளும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்டுள்ள அபராதங்களை செலுத்த பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது புஜைராவும் இணைந்துள்ளது. அமீரகத்தில் வழங்கி மகிழும் ஆண்டு கடைபிடிக்கப் படுவதாலும், அமீரக தேசிய தினம் கொண்டாடப்படவுள்ளதாலும் இந்த 50% சிறப்புத் தள்ளுபடியை அறிவிப்பதாக புஜைரா போலீஸ் துறை அறிவித்துள்ளது.

இந்த 50% அபராத சிறப்புத் தள்ளுபடி சலுகையை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் தேதி முதல் 2018 ஜனவரி 4 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என புஜைராவின் பட்டத்து இளவரசர் ஷேக் முஹமது பின் ஹமது அல் ஷர்க்கி அவர்கள் இசைவு தெரிவித்துள்ளதாக புஜைரா போலீஸ் துறைத் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Source: Khaleej Times

அதிரை நியூஸ்

No comments