புதுசு

ஈரான் ~ ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்: 61 பேர் பலி, 300 க்கும் மேற்பட்டோர் காயம்





ஈரான் ~ ஈராக் எல்லையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சுலமெனியா என்ற இடத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால், 61 பேர் பலியாகி உள்ளதாகவும், 300 க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.

துபாய், அபுதாபி உள்ளிட்ட அமீரகம் மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பல இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமீரக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Source : Gulf News

No comments