புதுசு

தமிழகத்தில் புதிதாக 70 மணல் குவாரிகள் திறக்க முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தமிழகத்தில் பல இடங்களில் புதிதாக 70  மணல் குவாரிகள் திறக்க முடிவு செய்யபப்ட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருச்சி, கரூர் மாவட்டங்களில் புதிதாக மணல் குவாரிகள் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மணல் தட்டுப்பாட்டை நீக்கவும் , மணல் விலையை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மணல் விற்பனையை முறைப்படுத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தலைமையில் 8 மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் மணல் விற்பனை தொடர்பாக புகார்கள் வருவதை தொடர்ந்துதான் , அதை தடுப்பதற்காகவும் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும் தான் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில் 2மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 8 மாவட்டங்களில் உள்ள 70 இடங்களில் மணல் குவாரிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மணல் திருட்டை ஒழிப்பது மட்டுமல்லாமல் விலை குறைவதற்கான வழிமுறைகளையும் வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

No comments