புதுசு

ஆஸ்திரேலியாவில் கார் ரேசில் ஈடுபட்ட 8 வயது சிறுமி மரணம்!அனிதா போர்டு என்கிற 8 வயது சிறுமி மேற்கு ஆஸ்திரேலியாவில் (Perth) அமைந்துள்ள குவைனனா மோட்டார் பிளக்ஸ் எனப்படும் கார் ரேஸ் மையத்தில் ஜூனியர் பிரிவினருக்காக நடத்தப்படும் 'டிரேக்ஸ்டெர்' (Dragster) அல்லது 'டிரேக் ரேஸ்' (Drag Race) என அழைக்கப்படும் சிறியரக வாகன போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாரா விதமாக ரேஸ் கோர்ஸின் சுற்றுச்சுவரில் மோதி பலத்த காயமடைந்தார்.

மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனிதா அங்கு சிகிச்கை பலனின்றி உயிரிழந்தார். இதுபோல் பெரியவர்கள் செய்யும் காரியத்தை சிறுவர்கள் செய்யும் போது நம்ம ஊர் பக்கம் 'சின்னப் புள்ளைக்கு ஏன் பெரிய அதாபு' என கண்டிப்பதை கேட்டிருப்பீர்கள் அல்லவா, இங்கு பெற்றவர்களே இதுபோன்ற அதாபுகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதால் ஏற்படும் துயரம் இது.

Source: Emirates 247

No comments