புதுசு

துபாயில் புதிய ஆப்ஸ் (Apps) மூலம் வாகன பார்க்கிங் செய்யும் நவீன வசதி!
ஐரோப்பிய மாடல் வாகனங்கள் மிகச்சிலவற்றில் தற்போதும் நடைமுறையிலுள்ள இந்த புதிய பார்க்கிங் சிஸ்டம் மெர்ஸிடஸ் பென்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘me connect’ app என்ற இந்த செயலியை கொண்டு உங்களுடைய வாகனத்தை டிரைவர் இயக்காமலேயே எந்தக் கோணத்திலும் பார்க்கிங் செய்யலாம்.

உங்களுடைய வாகனம் தேவைக்கு ஏற்ப முன்னோக்கி அல்லது பின்சென்று அல்லது ஒருபுறமாக நழுவிச்சென்று தன்னைத்தானே சீராக ஸ்லாட்டுகளுக்குள் செய்து கொள்ளும்.

இதுவரை துபையில் பொது உபயோகத்திற்கு அறிமுகப்படுத்தப்படாத செயலியை நேற்று 'எதிர்கால இயக்கத்திற்கான சர்வதேச கருத்தரங்கு (The third International Conference for Future Mobility - ICFM) ஒன்றில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி டைமுறைக்கு வரும் போது நம்முடைய வாகனத்தை சேதமின்றியும், தொந்தரவுகள் இன்றியும் பார்க்கிங் செய்ய உதவும்.

Source: Gulf news

No comments