புதுசு

அபுதாபி போலீசாருக்கு புதிய வண்ணங்களில் சீருடை!

அபுதாபி போலீஸார் தற்போது பச்சை வண்ண சீருடை அணிந்துள்ளனர். அபுதாபி போலீஸ் துறை அமைக்கப்பட்ட 60வது ஆண்டு கொண்டாடப்படும் நாளான நவம்பர் 21 ஆம் தேதி முதல் புதிய வண்ணச் சீருடைகளுக்கு மாறவுள்ளனர். போலீஸ் அதிகாரிகளின் பதவிகளுக்கு ஏற்ப 5 வகையான வண்ண உடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அபுதாபி காவல்துறையின் சிவப்பு வண்ண வாகனங்கள் புதிய கலருக்கு பதிலாக நீலம் மற்றும் வெள்ளை நிற வாகனங்கள் ஏற்கனவே செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக மாற்றப்பட்டு வருகிறது.

போலீஸாரின் கைகளில் உள்ள அடையாள அட்டைகளும் யாரும் போலியாக தயாரிக்க இயலாத நவீன மின்னனு தொழில்நுட்பத்துடன் அமெரிக்காவின் FBI எனும் காவல்துறையினர் பயன்படுத்தும் மடக்கு வகை அடையாள அட்டைகள் (Folding Type ID) போன்று விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. போலீஸாரின் பேட்ஜ் சின்னமும் அபுதாபியின் கலாச்சாரத்தை நினைவுபடுத்தும் வகையில் ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டது.

1. போலீஸாருக்கு தற்போது நடைமுறையிலுள்ள பச்சைநிற சீருடைகளுக்கு பதிலாக பழுப்பு நிற நிழல்களுடன் (Grey with shades) கூடிய மேலாடை (Jackets) மற்றும் கால்சட்டையுடன் (Trousers) காக்கி ஷூவிற்கு பதிலாக கருப்பு ஷூக்கள், சிவப்பிற்கு பதில் கருப்பு நிற தோள் பட்டிகள் மற்றும் வெளிரிய பழுப்புநிற தொப்பி.

2. களத்தில் கடமையாற்றும் (Field operation duties) மற்றும் விசாரணை அதிகாரிகள் (Officers on investigation) சாம்பல் மற்றும் கருநீல சீரடைகளை அணிய வேண்டும்.

3. பெண் போலீஸாரின் நீல நிற உடைக்குப் பதிலாக அடர் சாம்பல் நிற மேலாடை மற்றும் பாவாடை (Skirts), கருநீல தொப்பி, கருப்புத் தலைத்துணி, கருப்பு ஷூக்கள் ஆகியவை அறிமுகமாகிறது.

4. அபுதாபி போலீஸ்துறையின் பொது இயக்குனர் அலுவலக (General Directorate of Abu Dhabi Police) காவல்துறையினர் வெளிர் பழுப்பு நிற மேலாடை, அதே நிறத்தில் கால்சட்டை மற்றும் தொப்பி ஆகியவற்றுடன் கருப்பு ஷூ அணிவர்.

5. போலீஸ் நிர்வாக அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் (Administrative staff) வெளிர் பழுப்பு நிற மேலாடை, அதே நிறத்தில் கால்சட்டை மற்றும் கருப்பு ஷூக்கள்.

6. சிறப்பு உயர் அதிகாரிகள் (Specialized officers) மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீஸார் (Specialized task) அடர் சாம்பல் நிற மேலாடை மற்றும் அதே நிறத்தில் கால்சட்டையுடன் கருப்பு ஷூக்கள்.

7. ரோந்து போலீஸார் (Field patrols) வெளிர்நிற பழுப்பு மேலாடை மற்றும் அதே நிறத்தில் கால்சட்டை. பாலைவன பழுப்புநிற ஷூக்கள்.

8. பெண் போலீஸார் (நிர்வாகம் - Administration): கரும் சாம்பல் நிறத்தில் மேலாடை மற்றும் அதே நிறத்தில் பாவாடை. நீலத் தொப்பி மற்றும் கருப்பு ஷூக்கள்.

9. பெண் போலீஸார் (களம் - Field Operatios): கரும் சாம்பல் நிறத்தில் மேலாடை மற்றும் அதே நிறத்தில் கால்சட்டை. நீலத் தொப்பி மற்றும் கருப்பு ஷூக்கள்.

Source: Gulf News

No comments