புதுசு

ஷார்ஜாவில் ஓட்டுனர் உரிமம் பெற 'சாக்லெட்' லஞ்சம் கொடுத்த பெண் கைது!


 

ஷார்ஜாவில் 7 முறை வாகன ஓட்டுனர் பரிசோதனையில் தோல்வியடைந்த இமராத்தி பெண் ஒருவர் வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கும் மையத்தில் பணியாற்றும் ஷார்ஜா போலீஸ் அதிகாரிக்கு சாக்லெட் மற்றும் 500 திர்ஹத்தை லஞ்சமாக வழங்கி தன்னை தேர்ச்சி அடையச் செய்யும்படி வேண்டினார்.

இமராத்தி பெண் லஞ்சம் கொடுக்க முற்பட்டதை தனது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஷார்ஜா போலீஸ் அதிகாரியின் புகாரை தொடர்ந்து அந்தப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் கொடுத்ததை மறுத்துள்ள அந்தப்பெண் 'அன்பளிப்பு' கொடுத்ததாகவே வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Source: Khaleej Times

No comments