புதுசு

இந்திய சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சியளித்த அமீரகப் போலீஸார் !

11 வயது இந்திய சிறுவன் ஒருவன் தான் வளர்ந்தவுடன் ஒரு போலீஸ் அதிகாரியாக வர விரும்புவதாக விருப்பம் தெரிவித்திருந்ததை அறிந்த அபுதாபி போலீஸார் அந்தச் சிறுவனுக்கும் அவனது பெற்றோர்களுக்கும் இன்ப அதிர்ச்சியளித்தனர்.

அபுதாபி, அல் ரவ்தா போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட இந்திய சிறுவனையும் அவனது பெற்றோர்களையும் நிலைய இயக்குனர் ஹமாது அப்துல்லாஹ் அல் அஃபாரி இன்முகத்துடன் வரவேற்றார்.

இந்திய சிறுவனுக்கு போலீஸ் சீருடையை அணிவித்து பிறந்த நாள் கேக் ஒன்றுடன் பல பரிசுகளையும் வழங்கி வாழ்த்தினர்.

Source: Gulf News

No comments