புதுசு

முஸ்லீம்களுக்கு எதிரான சிந்தனையை விதைத்த ரஷ்யர்களின் குட்டு அம்பலம்


2017 மார்ச் 22 ஆம் தேதி லண்டன் மாநகரில் இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற கட்டிடம் மற்றும் அரண்மனை அமைந்திருக்கும் பகுதியான வெஸ்ட்மின்ஸ்டர் எனுமிடத்தில் நடைபெற்ற ஒரு தீவிரவாத தாக்குதலில் ஒரு போலீஸார் உட்பட 5 பேர் மரணமடைந்தனர், 50க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடைபெற்ற போது பொதுமக்கள் பலரும் அச்சத்தால் சிதறி ஓடினர் அவர்களில் ஒரு முஸ்லிம் பெண்ணும் இருந்த போட்டோ ஒன்றும் வெளியாகி பலத்த சர்ச்சையை, இன துவேசத்தை ஓங்கி ஒலித்தது.

#PrayForLondon #Westminster #BanIslam போன்ற இனவெறுப்பு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி இன துவேசத்தை தீவிரமாக பரப்பியவர்கள் ரஷ்யர்கள் என்ற உண்மை தற்போது வெளிப்பட்டு அம்பலமாகியுள்ளது. தீவரவாத சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமான மனநிலையுடன் செல்லும் ஒரு முஸ்லீம் பெண் நடந்து செல்லும் யதார்த்தமாக அமைந்த ஒரு போட்டோவை கொண்டு ஒரு முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான மனநிலையை இங்கிலாந்து உட்பட பல நாடுகளிலும் உண்டாக்கியது.

ரஷ்யாவில் இதுபோன்ற ஈனத்தனமான செயல்களை பரப்புவதற்காகவே 2,700 மேற்பட்ட 'டிரோல் பேக்டரிகள்;' செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செயல்படுவதாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் உளவுத்துறைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இவை அனைத்தும் அலுவலகம் போல் ரஷ்ய அரசின் அனுசரனையுடன் தினமும் காலை 8 மணிமுதல் மாலை 8 மணிவரை செயல்படுகின்றதும் என்பதும் வெளிவந்துள்ளது.

இன்டெர்நெட் ஆராய்ச்சி அலுவலகங்கள் என்ற பெயரில் செயல்படும் இந்த அபயகரமான ரஷ்ய அரசு நிறுவனங்கள் ஏற்கனவே பல்வேறு அவதூறுகளை பரப்பி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற உதவியதும், ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறலாமா என கருத்து கேட்டு நடைபெற்ற Brexit எனும் தேர்தலிலும் தனது கருத்து திணிப்பு கைவரிசைகளை பல்வேறு போலி சமூகதள முகவரிகள் மூலம் செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.

Source: The Independent

No comments