புதுசு

தஞ்சை ரயில்வே மேம்பாலத்தை நாளை திறக்க ஹைகோர்ட் கிளை இடைக்கால தடைநீலகண்டன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.52 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்து என மனுதாரர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தஞ்சையில் இருந்து நாகை செல்லும் சாலையில், 2013ல், மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. 870 மீட்டர் நீளம் மற்றும், 12 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், நாளை திறக்கப்பட உள்ளது. இதனிடையே, மேம்பாலத்தில் போடப்பட்டுள்ள சாலைகளில், வெடிப்பு ஏற்பட்டுள்ளது உள்ளது. இதையடுத்துதான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று விசாரித்த ஹைகோர்ட், தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் பதில் தர உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தது.

No comments