புதுசு

அமீரகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண்சரிந்து மரணம்!அமீரகம், ராஸ் அல் கைமாவில் நடைபெற்று வந்த ஒரு கட்டுமான தளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட திடீர் மண்சரிவுக்குள் புதைந்து 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசிய நாட்டவர் மரணமடைந்தார் மேலும் 25 மற்றும் 30 வயதுடைய இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவில் பாதுகாப்புத் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியதுடன் மண்ணில் புதைந்திருந்தவரின் சடலத்தை அதற்குரிய சிறப்பு வாகன உதவியுடன் மீட்டெடுத்தனர்.

Source: Gulf News
அதிரை நியூஸ்

No comments