புதுசு

உலகிலேயே முதல்முறையாக சீனாவில் ஆன்லைனில் விற்கப்பட்ட விமானம்பீஜிங்: சீனாவில் ஆன்லைனில் விமானம் விற்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சீன நிறுவனம் ஒன்று போயிங் ரக விமானத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறது. பல நாட்கள் விற்காமல் இருந்த இந்த விமானம் ஆன்லைன் மூலம் விற்கப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த விமானத்தை புக் செய்த நிறுவனத்தின் இடத்திற்கே சென்று நேரடியாக ஷாப்பிங் நிறுவனம் டெலிவரி செய்து இருக்கிறது.  சீனாவில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான போயிங் 747எஸ் ராக விமானம் இரண்டு பல நாட்களாக பயன்படுத்தபடாமல் இருந்து வந்து இருக்கிறது. கடந்த ஆறு வருடமாக இந்த விமானத்தை பல இடங்களில் விற்பனை செய்ய அந்த நிறுவனம் முயற்சி செய்து இருக்கிறது.

இந்நிலையில் விமானத்தை அலிபாபா குழுமத்தின் 'டோபாவ்' என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் வாங்கியது. இந்த இரண்டு விமானங்களையும் புதுப்பித்து புதிதாக பெயிண்ட் அடித்து விற்பனை செய்ய முடிவு செய்தது. மேலும் இதற்காக அவர்களது இணையதளம் முழுக்க நிறைய விளம்பரங்களை கொடுத்து இருந்தது.  'எஸ்.எஃப் ஏர் கார்கோ' என்ற ஏர்லைன்ஸ் நிறுவனம்  ஆன்லைன் மூலம் 48 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் செலுத்தி இந்த இரண்டு விமானங்களை வாங்கியது. எஸ்.எஃப் ஏர் கார்கோ நிறுவனம் தனக்கு சொந்தமான இடத்தில் வந்து விமானத்தை டெலிவரி செய்யும்படி கூறியது. அவர்கள் குறிப்பிட்ட அதே இடத்திற்கு மறுநாளே விமானத்தை அலிபாபா நிறுவனம் டெலிவரி செய்தது. உலகிலேயே ஆன்லைனில் விமானம் விற்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். 

No comments