புதுசு

அமீரகத்தில் எதிஸலாத் புதிய மலிவு கட்டண டேட்டா பேக்கேஜ் அறிமுகம் !
அமீரகத்தின் எதிஸலாத் தொலைத்தொடர்பு நிறுவனம் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பயனடையும் வகையில் புதிய இடைநில்லா டேட்டா பேக்கேஜ் திட்டத்தை (Business First mobile plan) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மாதம் 200 திர்ஹத்திற்கு குறைவாகவே கட்டணம் செலுத்த வேண்டி வரும் என எதிஸலாத் தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

பிஸ்னஸ் பஸ்ட் (Business First mobile plan) என்ற இந்தத் திட்டத்தின் கீழ் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் மாதம் 140 திர்ஹம் செலுத்தி 'இடைநில்லா டாட்டா பேக்கேஜை' “non-stop data” பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகையின் கீழ் இலவச லோக்கல் கால் நிமிடங்கள் மற்றும் இத்திட்டத்தின் கீழ் வரும் ஒரே நிறுவனத்தின் பிற நம்பர்களுக்கும் இலவச அழைப்பு செய்து கொள்ளலாம்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் இணைந்துள்ளோர் நிமிடத்திற்கு 38 பில்ஸ் என்ற கட்டணத்தில் சர்வதேச அழைப்புக்களையும், நிமிடத்திற்கு 18 பில்ஸ் என்ற கட்டணத்தில் உள்ளூர் அழைப்புக்களிலும் பேசிட கூடுதல் பேக்கேஜை பெற்றுக் கொள்ளலாம்.

Source: Gulf News

No comments