புதுசு

துபை விமான கண்காட்சி ~ போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய அறிவிப்பு !
துபையில் கடந்த சில வருடங்களாக 'ஏர் ஷோ' (Air Show) எனப்படும் விமான கண்காட்சியை ஒட்டி விமான சாகசங்களும், விற்பனையும் நடைபெற்று வருகிறது. இந்த வருட விமான கண்காட்சியில் சுமார் 1200 விற்பனை காட்சியாளர்கள் பங்கு பெறுகின்றனர்.

இந்த வருட துபை ஏர் ஷோ எதிர்வரும் நவம்பர் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு 'அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவுள்ளதால் விமான நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என துபை போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. இந்த விமான சாகச கண்காட்சி தினமும் காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறும்.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக தங்களுடைய வாகனத்தை தவிர்த்துவிட்டு 'இப்னு பத்தூதா மால் மற்றும் அல் மக்தூம் விமான நிலையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ஷட்டில் பஸ் சேவையை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், நெரிசல் அதிகமிருக்கும் என கணிக்கப்பட்டுள்ள ஷேக் ஜாயித் ரோடு, அல் எலாயீஸ் தெரு, எமிரேட்ஸ் ரோடு, ஷேக் முஹமது பின் ஜாயித் ரோடு மற்றும் ஜெபல் அலி – லெஹ்பாப் ரோடு ஆகியவற்றை தவிர்ப்பதுடன் இங்கு வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தவும் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Source: Gulf News

No comments