புதுசு

பாஸ்போர்ட்டை அடமானம் வைத்து சூதாடும் குவைத் நாட்டவருக்கு அரசு எச்சரிக்கை


குவைத்தில் சூதாட்டம் தடை செய்யப்பட்ட ஒன்று எனினும் வெளிநாடுகளுக்குச் செல்லும் குவைத்தியர்கள் அங்குள்ள சூதாட்ட விடுதிகளில் தங்களுடைய பாஸ்போர்ட்டுகளை பணத்திற்காக அடமானம் வைத்து சூதாட்ட புரோக்கர்களிடம் இழந்துவிட்டு வருவது சமீபத்திய விசாரணை ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

சூதாடும் குவைத்தியர்கள் ஒரு கட்டத்தில் தங்களுடைய பணம் அனைத்தையும் இழந்து விட்டு 'பாஸ்போர்ட்டை காணவில்லை' என எமர்ஜென்ஸி சர்ட்டிபிகேட் மூலம் நாடு திரும்பினாலும் தங்களுடைய வீடு வாசல்களையும், வாகனங்களையும் சூதாட்ட கும்பலிடம் பட்ட கடனுக்காக இழப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சூதாட்ட கும்பலிடம் பாஸ்போர்ட்டை அடமானம் வைத்துவிட்டு தொலைந்து போய்விட்டதாக பொய் சொல்லும் குவைத்தியர்கள் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடுவதுடன் மீண்டும் புதிய பாஸ்போர்ட் பெற 5 மாதங்களுக்கு மேல் காத்திருக்க நேரிடும் என குவைத் அரசு எச்சரித்துள்ளது.

Source: Gulf News

No comments