புதுசு

சவூதி ஜித்தாவில் வெளுத்து வாங்கும் கனமழை… சாலைகளை தண்ணீர்..!சவூதி அரேபியாவின் ஜித்தா, மக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் இன்று கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அந்த வகையில் இன்று காலை முதல் அப்பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சில மணி நேரம் பெய்த மழைக்கே சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இது குறித்து ஜித்தாவின் ஷரஃபிய்யா பகுதியில் வசித்து வரும் அதிரையை சேர்ந்த வஜீர் அலி அவர்கள் நம்மிடம் கூறியதாவது…. ” இன்று காலை முதல் இங்கு பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சவூதியில் பெய்த இதே போன்ற கனமழையால் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. அதே போன்று தற்போது ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது” என்றார்.

No comments