புதுசு

அமீரகத் திருமண ஒப்பந்தங்களும், மணமுறிவுகளும் - புள்ளி விவரம் !இஸ்லாம் திருமண ஒப்பந்தங்கள் குறித்து மிக அழகிய வழிமுறையை வழங்கியுள்ளது. பொதுவாக ஆண் தன் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும், பெண் அவனது குடும்பத்தை செம்மையாக செதுக்க வேண்டும். இந்த சமநிலை அடிப்படையை தகர்ப்பதால் ஏற்படுவதே பல திருமண ஒப்பந்த முறிவுகளின் பின்னனி.

அமீரகத்தில் கடந்த 2016 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் தான் அதிக திருமண ஒப்பந்தங்கள் பதிவாகியுள்ளன. அதே மார்ச் மாதத்தில் தான் பல மணமுறிவுகளும் பதிவாகியுள்ளதாக அபுதாபி புள்ளியியல் மையம் (The Abu Dhabi Statistics Centre - ADSC) தெரிவித்துள்ளது.

அபுதாபியில் 2016 ஆம் ஆண்டு மொத்தம் 5,892 திருமண ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 70.9% திருமணங்கள் வெளிநாட்டினருடன் செய்து கொள்ளப்படும் கலப்புத் திருமணமாகும். 2015 ஆம் ஆண்டை விட இது 2.4% குறைவாகும். கலப்புத் திருமணம் என்பது ஒரு இமராத்தி ஆண் வெளிநாட்டு பெண்ணை அல்லது ஒரு இமராத்தி பெண் ஒரு வெளிநாட்டு ஆணை மணப்பதாகும்.

2016ல் அபுதாபியில் திருமணம் செய்து கொண்ட ஆண்களின் சராசரி வயது 27.2 வருடங்கள், பெண்ணின் வயது 24.2 வருடங்கள். இதில் அதிக திருமணங்கள் மார்ச் மாதத்திலும் குறைவாக ஜூன் மாதத்திலும் நடந்துள்ளன.

1,922 விவாகரத்துக்கள் நடந்தேறியுள்ளன. அவற்றில் 68.2% முறிவுகள் அமீரக ஆண் பெண் மத்தியில் நடைபெற்றதாகும். அதிக மணமுறிவுகள் மார்ச் மாதத்திலும் குறைந்தளவில் செப்டம்பர் மாதத்திலும் நிகழ்ந்துள்ளன. மேற்படி மணமுறிவுகளில் 28.2% ஒரு வருடத்தைக் கூட பூர்த்தி செய்யாதவை. 50% மூன்று வருடங்கள் கூட தாக்குப்பிடிக்காதவை.

2016 ஆம் ஆண்டு திருமணம் செய்தவர்களில் சுமார் 58.6% பேர் பதினைந்து மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள். இவர்களில் 35.7% பேர் முதன்முறையாகவும், 5.7% பேர் விவாகரத்திற்குப் பின் மறுமணமும் செய்து கொண்டவர்கள்.

Source: Gulf News
நன்றி :அதிரை நியூஸ்

No comments