புதுசு

இந்தியா புதிய வரலாறு பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி


நிலம் மற்றும் கடல்வழி இலக்கை மட்டுமே வைத்து சோதித்து பார்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது வான்வெளியில் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் ெவளியிட்டுள்ள அறிக்கையில், ‘வங்காள விரிகுடா கடலில் இலக்கை துல்லியமாக தாக்கும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணை


 நேற்று சுகோய்-30 எம்.கே.ஐ. போர் விமானம் மூலம் வெற்றிகரமாக வீசி சோதனை செய்து பார்க்கப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணை 2.5 டன் எடை கொண்டது. உலகின் அதிவேகமான ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ரஷ்யாவின் என்.பி.ஓ.எம். பிரிவின் கூட்டு தயாரிப்பில் பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

No comments