புதுசு

சென்னை முகப்பு > செய்திகள் > சென்னை வெள்ள அபாயத்தை கணிக்க நவீன கருவி: இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் அறிமுகம்
மழை பெய்வதை கணிக்க முடியும். மழையால் எவ்வளவு தண்ணீர் கிடைக்கும் என்பதற்கான தொழில்நுட்பம் இல்லை. அதனை சாத்தியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சென்னை ஐஐடி நிறுவனத்தினர் 'ஃப்ளட் மானிடரிங் சென்சார்ஸ்' என்ற கருவியை வடிவமைத்துள்ளனர். அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களில் 6 இடங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. 

நாட்டிலேயே முதன்முறையாக சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் பெங்களூரு, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இதர நகரங்களுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2015 டிசம்பரில் அடித்து நொறுக்கிய மழையால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவுப்பின்றி திறக்கப்பட்டதால் தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். 

அதுபோன்ற நிலையை தடுக்க இதுபோன்ற திட்டம் அவசியம் என்கின்றனர் மக்கள். திருவிக பாலம், சைதாபேட்டை, நேப்பியர் பாலம், அண்ணா நகர் பாலம், எண்ணூர் பாலம் ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகளையும் அவர்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். மழையால் கிடைக்கும் தண்ணீரை அளக்க புதிய திட்டம் வழிவகுப்பது மகிழ்ச்சியே. கிடைக்கின்ற மழை நிரை சேமித்து வைக்க திட்டமின்றி கடலில் வீணாக கலப்பது தான் வேதனையின் உச்சம் ஆகும். 

No comments