புதுசு

துபையில் காருக்குள் நடப்பதை போலீசார் கண்காணிக்கும் புதிய தொழிற்நுட்பம் !

துபையில் விரைவில் காருக்குள் நடப்பதையும் போலீஸார் கண்காணிக்கும் செயற்கை அறிவு தொழிற்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

துபையில் போலீஸார் தங்களின் போலீஸ் வாகனத்திற்குள் இருந்தபடியே பிற வாகனங்களுக்குள் நடக்கும் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களை கண்டுபிடிக்கும் செயற்கை அறிவு தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளனர்.

இந்தத் தொழிற்நுட்பத்தை துபை போலீஸாருக்கு உருவாக்கி கட்டமைத்து தருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை "Com-Iot Technologies" என்ற நிறுவனத்துடன் துபை போலீஸார் செய்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக போக்குவரத்து விதிமீறல்கள், வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பாவித்தல், உணவும் நீரும் அருந்துதல், தறிகெட்டு வாகனத்தை ஓட்டுதல் மற்றும் தேடப்படும் வாகனத்தை பிடிப்பதற்கும் இந்த புதிய தொழிற்நுட்பம் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொல்லப்படாததும், தனிமனித உரிமையும் எதிர்காலத்தில் செயற்கை அறிவால் என்ன பாடுபடுமோ தெரியவில்லை.Source: Khaleej Times / Msn
தமிழில்: adirai news

No comments