புதுசு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அதிகளவு பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிப்புஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிர் பஞ்சல் ரேஞ்ச் மலைத் தொடர் பகுதியில் அதிகளவு பனிப்பொழிவதால் சாலைகளில் பனி அடர்ந்து காணப்படுகிறது. கரு மேகங்கள் சூழ்ந்து அப்பகுதி முழுவதும் இருளாக காணப்படுவதுடன், சாலை முழுவதையும் பனி ஆக்கிரமித்துள்ளது.

இதனால் வரலாற்று சிறப்புமிக்க முகல் சாலை மூடப்பட்டது. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிறிது நேரம் நின்றாலும் கூட மூழ்கடித்து விடும் அளவுக்கு பனி பெய்கிறது. சாலைகளில் உள்ள பனி, ஜேசிபி வாகனம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. குளிர்காலம் ஆரம்பித்த நிலையில், வட இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை குறைந்துள்ளது. வடகிழக்கு இந்தியாவில், குறிப்பாக அசாம் மாநிலத்தலும் சராசரி வெப்பநிலையில் குறைந்து பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.

No comments