புதுசு

மறுமை நாள் நெருங்கிவிட்டது ~ உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் அறிவிப்பு!

நமது சமகால உலகில் வாழும் விஞ்ஞானிகளில் மிகவும் புகழ்பெற்றவர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் என்கிற இயற்பியல் விஞ்ஞானி கடந்த ஞாயிறு அன்று சீன தலைநகர் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்ற 2017 Tencent WE Summit எனும் உச்சிமாநாடு ஒன்றில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

இந்த உலக அழிவு இன்னும் 600 ஆண்டுகளுக்குள் நடைபெறும் என்றும், மனிதகுல பெருக்கம் மற்றும் அபரிமிதமான ஆற்றல் நுகர்வுகளால் இந்த உலகம் பெரும் நெருப்பு பந்தால் சூழலப்பட்டு அழியும் என தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் முன்பே எச்சரித்துள்ளதை பாருங்கள்:
மேலும், வானங்கள் மற்றும் பூமியின் மறைவான உண்மைகளைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறது. மேலும், இறுதிநாள் நிகழ்வதற்கு அதிக நேரம் தேவையில்லை. கண் சிமிட்டும் நேரம், ஏன் அதைவிடவும் குறைந்த நேரம் போதுமானதாகும். உண்மை யாதெனில், அல்லாஹ் அனைத்தையும் செய்வதற்குப் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 16:77)

அல்லாஹ்வின் வேதனைகளிலிருந்து அவர்களைத் திணற அடிக்கக்கூடிய ஒரு வேதனை அவர்களிடம் வராதென்றோ அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென்று இறுதிநாள் அவர்களிடம் வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றார்களா(அல்குர்ஆன்: 12:107)

என்ன, இந்த மக்கள் மறுமைநாள் தங்களிடம் திடீரென வந்துவிட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றார்களா? அதன் அடையாளங்கள் வந்துவிட்டனவே! அந்நாளே அவர்களிடம் வந்துவிட்டால், அறிவுரையை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு எந்த வாய்ப்புதான் எஞ்சி இருக்கப்போகிறது?(அல்குர்ஆன்: 47:18)

பெரும் திகிலை ஏற்படுத்தும் அந்நேரம் அவர்களைச் சிறிதளவும் துயரத்தில் ஆழ்த்தாது. மேலும், “உங்களிடம் வாக்களிக்கப்பட்ட நாள்தான் இந்நாள்” என்று கூறிக்கொண்டு வானவர்கள் அவர்களை எதிர் கொண்டு வரவேற்பார்கள்.(அல்குர்ஆன்: 21:103)

மறுமைநாள் எப்போது வரும் என்று மக்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.” உமக்குத் தெரியுமா என்ன? அந்நாள் நெருங்கி வந்திருக்கலாம்.(அல்குர்ஆன்: 33:63)

நீர் கூறும்: “உங்களுக்காக எத்தகைய ஒரு நாள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது எனில், அதன் வருகையை ஒரு நிமிடம் பிற்படுத்தவும் உங்களால் முடியாது; ஒரு நிமிடம் முற்படுத்தவும் முடியாது.”(அல்குர்ஆன்: 34:30)

மேலும், அந்த நாள் வருவதற்கு முன்பும் கூட கொடுமைக்காரர்களுக்கு ஒரு வேதனை இருக்கின்றது. ஆனால், அவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.(அல்குர்ஆன்: 52:47)

அந்த நாள் மிகக் கடுமையான நாளாய் இருக்கும்.(அல்குர்ஆன்: 74:9)

அந்நாள் (வருவது) உண்மையாகும். எனவே, நாடியவர் தம்முடைய இறைவனின் பக்கம் மீளும் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.(அல்குர்ஆன்: 78:39)

ஆகவே, (நபியே!) இத்தகைய வேதனை நாள் வருவதைப் பற்றி நீங்கள் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். வரம்பு மீறியவர்கள் (அந்நாளில் தங்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு சொற்பத் தவணையளி! நாங்கள் உன் அழைப்புக்கு (இனி) செவி கொடுத்து, (உன்) தூதரைப் பின்பற்றி நடப்போம்" என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) "இதற்கு முன்னர் நீங்கள் உங்களு(டைய இவ்வுலக வாழ்க்கை)க்கு அழிவே இல்லை என்று சத்தியம் செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா?" (என்று கேட்பான்.)(அல்குர்ஆன்: 14:44)

அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நாங்கள் (நபி (ஸல்) அவர்களது அறைக்குக் கீழே) பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களை எட்டிப்பார்த்து, "எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். மக்கள், "யுகமுடிவு நாளைப் பற்றி (பேசிக் கொண்டிருக்கிறோம்)" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் (பெரிய) பத்து அடையாளங்களைக் காணாத வரை யுகமுடிவு நாள் ஏற்படவே செய்யாது" என்று கூறிவிட்டு, அந்த அடையாளங்களைப் பற்றிக் கூறினார்கள்:

1. புகை, 2. தஜ்ஜால், 3. (பேசும்) பிராணி, 4. மேற்கிலிருந்து சூரியன் உதிப்பது, 5. மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் இறங்குதல், 6. யஃஜூஜ், மஃஜூஜ், 7.8.9. மூன்று நில நடுக்கங்கள். ஒன்று கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும், இன்னொன்று அரபு தீபகற்பத்திலும், 10. இறுதியாக யமன் நாட்டிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி மக்களை விரட்டிக்கொண்டு வந்து ஓரிடத்தில் ஒன்றுகூட்டும்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book :52 (ஸஹீஹ் அல் முஸ்லீம்: 5558)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, (ஷாம் நாட்டின்) புஸ்ரா (ஹவ்ரான்) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாத வரை மறுமை நாள் வராது. 49
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :92 (ஸஹீஹ் அல் புஹாரி: 7118)

Source: Mirror

No comments