புதுசு

அதிக சத்துள்ள கம்பு தானியத்தை ரேசன் கடைகளில் விற்க மத்திய அரசு திட்டம்தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது. நாம் சாப்பிடும் உணவு தானியங்களிலேயே கம்பு தான் அதிக சத்து கொண்டது. ஆனால் இதனை ஒருசில பகுதி மக்கள் மட்டும் தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். இது மக்களின் முக்கிய உணவாக இன்னும் மாறவில்லை. கம்பு உணவை அதிகம் சாப்பிட்டால் தொற்று நோய்கள் பரவுவது தடுக்கப்படும். நீரிழிவு, மன அழுத்தம், இதய நோய்கள், புற்று நோய் போன்றவையும் தடுக்கப்படும்

இந்நிலையில் மக்களுக்கு ரே‌சன் கடைகளின் மூலம் கம்பு தானியத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள மத்திய விவசாயத்துறை செயலாளர் பட்நாயக், வேறு எந்த உணவு தானியத்திலும் இல்லாத சத்து கம்பு தானியத்தில் அதிகளவு இருப்பதால் மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றை சாப்பிடும் பழக்கத்தை மக்களிடம் அதிகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். இதன்படி ரே‌சன் கடைகளில் கம்புவை வினியோகிக்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் கம்பு விளைச்சல் குறைவாக உள்ளது. தற்போதுள்ள கம்பு தானியங்களும் அதிக உற்பத்தியை கொடுக்கும் ரகமாக  இல்லை. எனவே புதிய வீரிய கம்பு ரகங்களை அறிமுகம் செய்து கூடுதல் உற்பத்திக்கு ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டு வருவதாக கூறினார். மதிய உணவு திட்டத்தில் கம்புவை முக்கிய உணவு பொருளாக சேர்க்கும் திட்டமும் உள்ளதாக பட்நாயக் கூறியுள்ளார். 

No comments