புதுசு

ஏர் இந்தியா விமானப் பயணிகளுக்கு 50 கிலோ லக்கேஜ் ஆஃபர் (முழு விவரம்)துபை, ஷார்ஜா மற்றும் அபுதாபி விமான நிலையங்களிலிருந்து இந்திய நகரங்களான சென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் கொச்சி செல்லும் ஏர் இந்தியா விமானங்களில் 2017 டிசம்பர் 10 ஆம் தேதி வரை 50 கிலோ லக்கேஜ் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர்.

இந்த சலுகை ஏற்கனவே அக்டோபர் மாதம் 25 தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் துவங்கி டிசம்பர் 10 வரை பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

அதேவேளை ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி, 1 லக்கேஜ்ஜின் எடை 32 கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாது. இந்த சலுகை பிஸ்னஸ் மற்றும் எகானமி வகுப்பு பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

அபுதாபியிலிருந்து மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் இந்த சலுகையை செப்டம்பர் 16 தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கும் கூடுதல் சலுகையாக டிச. 10 வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேவேளை ஷார்ஜாவிலிருந்து கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் செல்லும் பிஸ்னஸ் வகுப்பு பயணிகள் மட்டும் இந்த சலுகையை அனுபவிக்கலாம்.

துபை – டெல்லி எகானமி வகுப்பு பயணிகள் மற்றும் ஷார்ஜா – கோழிக்கோடு, திருவனந்தபுரம் எகானமி வகுப்பு பயணிகள் இதே காலகட்டத்தில் 40 கிலோ லக்கேஜ் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

ரியாத், தம்மாம், மஸ்கட் மற்றும் குவைத்திலிருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களிலும் இதுபோன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: adirai news

No comments