புதுசு

இனாமுல் ஹஸன் கண்டுபிடித்த உலகக் கடிகாரம்சென்னை திருவொற்றியூர், தாங்கல் பகுதியைச் சேர்ந்த இனாமுல் ஹஸன் என்கிற சையத் ஹஸன் உலகக் கடிகாரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்.
எல்லா நாடுகளின் நேரங்களையும் ஒரு சுவர் கடிகாரத்திற்குள் அடங்கியவாறு கண்டுபிடிப்பது என்பது, உலக ஆய்வாளர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.

ஆனால், ஏழாம் வகுப்பு மட்டுமே படித்து, நறுமணப் பொருள் (அத்தர்) வியாபாரம் செய்து வந்த எளிய மனிதரான ஹஸன், இந்த இலக்கைத் தொட்டிருக்கிறார்.

வானியல் துறையில் ஆர்வம் கொண்டவரான இவர், திருக்குர்ஆனின் ஆழ்ந்த வாசிப்பில் ஊறித் திளைத்தவர். “வானங்கள், பூமி, கோள்கள், இரவு பகலின் தொடர் வருகை போன்ற திருக்குர்ஆனின் வசனங்களை ஆழப்படித்து, சிந்தித்து, விடா முயற்சியோடு உழைத்ததால் இக்கடிகாரத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது” என்கிறார்.

இந்தக் கடிகாரத்தில் ஜி.எம்.டி.(Greenwich Mean Time) யு.டி.சி. (Co-ordinated Universal Time) நேரங்களையும் காணலாம். இது சூரியனின் சுழற்சி முறையையும் இரவு பகல் நேரங்களையும் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்திரனின் வட்டப் பாதையையும், சூரியனின் ஆண்டுச் சுழற்சி முறையையும் கணிக்கலாம்.  இந்தக் கடிகாரத்தில் இரண்டு திசை காட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. 96 ஜி.எம்.டி. எண்களும், 4 நிறங்களிலான கோடுகளும், ஐந்து முள்களும் உள்ளன.

கடிகாரத்தின் அறிவுசார் பாதுகாப்பு உரிமைக்காக அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் காப்புரி மைகளுக்கான அலுவலக இதழில் இந்தக் கடிகாரம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கடிகாரத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்கும் பட்சத்தில், உலகளவில் இந்தக் கடிகாரத்தை உருவாக்கிய பெருமை இந்தியாவுக்கும் தமிழனுக்கும் கிடைக்கும்.
வரும்காலங்களில் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் எப்போது ஏற்படும் என்பதையும், எல்லா நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு ஊரிலும் தற்-போது என்ன நேரம் இருக்கும் என்பதையும் துல்லியமாகச் சொல்ல முடியும் எனவும் கூறுகிறார்.

உலகக் கடிகாரத்தைக் கண்டுபிடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளும், இரண்டு இலட்சம் ரூபாயும் செல--வாகி--யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

                                                         

No comments