புதுசு

அமீரக வாட் வரியால் வெளி உலகிற்கு தெரிய வந்த 1,5,10 பில்ஸ் சில்லரை நாணயங்கள் இருப்பு!அமீரக வாட் வரியால் வெளியுலகிற்கு தெரிய வந்த 1,5,10 பில்ஸ் சில்லரை நாணயங்களின் இருப்பு.

அமீரகத்தில் 25, 50 பில்ஸ் (Fils - காசுகள்) மற்றும் 1 திர்ஹம் ஆகியவை நாணயங்களாக புழக்கத்தில் உள்ளன ஆனால் இன்னும் செல்லுபடியாகக் கூடிய 1, 5 மற்றும் 10 பில்ஸ் நாணயங்களும் உள்ளன என்ற உண்மை அமீரகத்தில் வாட் வரி நடைமுறை படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து யுஏஈ சென்ட்ரல் பேங்க் (The UAE Central Bank) விளக்கத்தின் மூலம் வெளிவந்துள்ளது என்றாலும் இத்தகைய நாணயங்களை வங்கிகள் கூட இருப்பில் வைத்திருக்கவில்லை என்ற உண்மையும் சேர்ந்தே வெளிவந்துள்ளது.

உதாரணத்திற்கு, 5% வாட் வரி வசூலிக்கப்படுவதால் 1 திர்ஹம் விற்கப்பட்ட டீ தற்போது 1.05க்கு விற்கப்பட வேண்டும் ஆனால் கடைக்காரர் 1.50 திர்ஹம் எடுத்துக் கொள்கிறார் அல்லது 0.05 பில்ஸை விட்டுத் தருகிறார். அதேபோல் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஏதோ ஒரு பொருளை வாங்கும் வாட் வரி உட்பட 0.90 பில்ஸ் வரும் போது கடைக்காரர் 1 திர்ஹத்தை முழுமையாக எடுத்துக் கொள்கிறார் அல்லது 1.63 திர்ஹத்திற்கு பொருள் வாங்கினால் 1.50 திர்ஹம் மட்டுமே வசூலிக்கின்றார் என இப்படி நடைமுறைச் சிக்கல்கள் நிலவுகின்றன. மக்களும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள ஓரளவு பழகிவிட்டனர்.

இந்நிலையில், கல்ப் நியூஸ் (Gulf News) பத்திரிக்கை ஒரு சில வங்கிகளில் 1, 5, 10 பில்ஸ் நாணயங்கள் இருக்கின்றதா? என நேரடி கள ஆய்வில் இறங்கியது ஆனால் அனைத்து வங்கிகளும் அந்த நாணயங்கள் தங்களிடம் இல்லை என்றே தெரிவித்தது அதிர்ச்சியளித்துள்ளது ஏனென்றால் அந்த நாணயங்கள் அனைத்தும் இன்றும் செல்லத்தக்கவையே.

அதேபோல் பெரும்பெரும் சூப்பர், ஹைப்பர் மார்க்கெட்டுகள் முதல் சிறிய குரோசரிகள் வரை நிலமை இதுதான் என்றாலும் விலைபட்டியல் மட்டும் சரியான சில்லரை தர முடியாத அளவிற்கு கன்னாபின்னா என இருந்துள்ளது.

சில்லறை குழப்பம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறை (The Abu Dhabi Department of Economic Development - ADDED) வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, 5 அல்லது 10 பில்ஸ் சில்லறை இல்லாத நிலையில் 25 பில்ஸாக (Round Up) வசூலித்துக் கொள்ளலாம் அதேவேளை அதிகபட்சம் 20 காசுகளுக்குள் மட்டுமே இவ்வாறு வாங்கலாம், உதாரணத்திற்கு 10.05 திர்ஹத்திற்கு பதிலாக 10.25 வசூலித்துக் கொள்ளலாம் ஒருவேளை 10.35 திர்ஹம் என பில் வந்தால் அதை 10.50 ஆக கணக்கிட்டுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் எவராவது உங்களிடம் கூடுதலாக வசூலித்தால் காலை 7 மணிமுதல் இரவு 10.30 மணிவரை 600522225 என்ற இந்த எண்ணில் பொருளாதார அமைச்சக அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Consumers can also complain to the Ministry of Economy on the number 600522225, which works from 7am to 10.30pm.

Source: Gulf News
தமிழில் : adirai

No comments