புதுசு

அமீரகம் வருகை தரும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பயணிகளுக்கு எச்சரிக்கை !
இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளிலிருந்து அமீரகத்திற்கு கொண்டு வரப்படும் மருந்துகள் குறித்து எச்சரிக்கை.

இந்திய துணைக்கண்ட நாடுகளிலிருந்து சொந்த உபயோகத்திற்காக மருந்துகள் கொண்டு வரப்படுகின்றன, அத்தகைய மருந்துகளில் அமீரகத்தில் தடை செய்யப்பட்ட codeine, pseudoephiderine and pholcodine பொருட்கள் கலந்திருந்தாலோ அல்லது தேவைக்கு அதிகமாக அனுமதிக்கப்பட்ட மருந்துகளை கொண்டு வந்தாலோ தண்டனைகளை சந்திக்க நேரிடும், கைது செய்யப்பட்டு உங்கள் நாடுகளுக்கே திருப்பி விடப்படுவீர்கள் என அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பிற்கான அமைச்சகம் எச்சரித்துள்ளது.

பொதுவாக, இந்தியாவில் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் பலவற்றில் அமீரகத்தில் தடை செய்யப்பட்ட codeine, pseudoephiderine and pholcodine போன்ற பொருட்கள் கலந்துள்ளன. இத்தகைய போதை பொருட்கள் இருமல், வலி நிவாரணி மற்றும் மனநோய்களுக்கான மருந்துகளிலும் கலந்துள்ளன. மேலும் அளவுக்கு அதிகமாக கொண்டு வரப்படும் மருந்துகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதாக கருதப்படும்.

பயணிகள் இத்தகைய மருந்துகளை சுய உபயோகத்திற்காக கொண்டு வருமுன் என்ற Registration and Drug Control Department துறையிடம் முன் அனுமதி பெற்றுக் கொள்வது சிறந்தது.

பயணிகள் தங்களின் சுய உபயோகத்திற்காக கொண்டு வரும் மருந்துகள் ஏர்போர்ட் மற்றும் துறைமுகங்களில் கஸ்டம்ஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

பயணிகள் தங்களுடைய மருந்துகளுடன் டாக்டரால் தரப்பட்ட ஒரிஜினல் பரிந்துரை சீட்டை (Original prescription receipt) அல்லது நகலை அட்டஸ்ட் செய்து எடுத்து வருதல் நலம். அதிகபட்சம் 30 தினங்களுக்குரிய மருந்துகளை தங்களுடன் எடுத்து வரலாம். prescription-only medicines (POM) என்ற பட்டியலின் கீழ் வரும் மருந்துகளை மட்டும் டாக்டரின் ஒரிஜினல் பரிந்துரையுடன் அதிகபட்சம் 3 மாத தேவைகளுக்கு எடுத்து வரலாம்.

பயணிகளால் கொண்டு வரப்படும் அமீரகத்தில் தடை செய்யப்பட்ட மருந்துகள், பதிவு செய்யப்படாத மருந்துகள், மூலிகை மருந்துகள், முன்பு அமீரகத்தில் பதிவு செய்யப்பட்டு பின்னாளில் பதிவு ரத்து செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் அமீரகத்தில் விநியோகிக்க அனுமதி பெறப்படாத மருந்துகள ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்ள கீழ்க்காணும் அலுவலகத்தை அல்லது அதன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.

For a detailed list of the narcotics, psychotropic and controlled medicines, one can log on to www.moh.gov.ae or contact the Narcotics and Psychotropic Control Section, Registration and Control Department at the Ministry of Health and Prevention on 026117505.

மருந்துகளில் கலந்துள்ள தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:

Top 20 medicines on the narcotics, psychotropic and controlled list 
Alpha-methylifentanyl: Prohibited

Betamethodol: Narcotic

Cannabis: Prohibited

Codoxime: Narcotic

Concentration of poppy straw: Prohibited

Fentanyl: Narcotic

Methadone: Narcotic

Morphine: Narcotic

Opium: Narcotic

Oxycodone: Narcotic

Phenoperidine: Narcotic

Trimeperidine: Narcotic

Ketamine: Psychotropic

Codeine: Narcotic

Cathinone: Prohibited

Amphetamine: Pscyhotropic

Pentobarbital: Pscyhotropic

Bromazepam: Psychotropic

Risperidone: Controlled Drug A

Tramadol: Controlled Drug A

For the full list: medicines on the narcotics, psychotropic and controlled list

Source: Gulf News
தமிழில் : adirai

No comments