புதுசு

நைஜீரியாவில் பள்ளி மீது தீவிரவாதிகள் தாக்குதல் : 110 குழந்தைகள் நிலை தெரியாமல் பெற்றோர்கள் கதறல்
நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 110 மாணவிகளை மீட்கும் நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள டாப்ச்சி நகரில் உள்ள பெண்கள் பள்ளியில் கடந்த வாரம் போகோ ஹாரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.


அப்போது ஆசிரியர்களும் மாணவிகளும் அங்காங்கே சிதறி ஓடினர்.அவர்களில் 110 மாணவிகளின் நிலை என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. எனவே அவர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பயங்கரவாதிகளின் தாக்குதல்களை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் ராணுவ விமானங்களில் டாப்ச்சி நகருக்கு திரும்பியுள்ளனர்.

அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு கடத்தப்பட்ட மாணவிகளை மீட்பதற்கான முயற்சிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.கடத்தப்பட்ட மாணவிகள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இதற்கிடையே மாணவிகள் கடத்தப்பட்டது தேசிய பேரிடர் என்று நைஜீரிய அதிபர் மொஹம்மது புஹாரி கூறியுள்ளார். ஏற்கனவே இந்த தீவிரவாதிகள் 2014-ம் ஆண்டில் 270 மாணவிகளை கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

No comments