புதுசு

துபை விமான நிலைய ரன்வே மேம்பாட்டு பணிக்காக 2019 ஆம் ஆண்டில் 45 நாட்கள் ஒரு ரன்வே மூடல்!
துபையில் ரன்வே பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக அடுத்த வருடம் 45 நாட்களுக்கு மூடப்படுகிறது

துபை சர்வதேச விமான நிலையத்தில் வடக்கு மற்றும் தெற்கு என 2 பிரதான ரன்வேக்கள் உள்ளன. இவற்றில் தினமும் சுமார் 1,100 விமானங்கள் இறங்கி, ஏறிச் செல்கின்றன. இதன் பராமரிப்பு பணிகள் வாராந்திர அடிப்படையில் செய்யப்பட்டு வருகின்றன என்றாலும் பாதுகாப்பு, சேவை மற்றும் திறனை மேம்படுத்துவதற்காக ரன்வேக்கள் மற்றும் அது தொடர்பிலான உட்கட்டமைப்புக்கள் முற்றிலும் புதிதாக சீரமைக்கப்படும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இதுபோல் வடபுற ரன்வேக்கான பெரும் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதை தொடர்ந்து தென்புற ரன்வே மட்டுமே இயங்கியது. அக்கால கட்டத்தில் விமான சேவைகள் குறைக்கப்பட்டதுடன் சில சேவைகள் துபை வேல்டு சென்ட்ரல் எனப்படும் மக்தூம் விமான நிலையத்திற்கும், ஒரு சில ஷார்ஜா விமான நிலையத்திற்கும் தற்காலிக திருப்பிவிடப்பட்டன.

தற்போது தென்புற ரன்வேயில் பெரும் சீரமைப்பு பணிகளை எதிர்வரும் 2019 ஏப்ரல் 16 முதல் மே 30 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு மூடப்படுவதன் காரணத்தால் வடபுற ரன்வே மட்டுமே இயங்கும் என்பதால் விமான சேவைகளை குறைக்கவும் மாற்றுத் திட்டங்களில் ஈடுபடவும் அவகாசம் கிடைத்திடும் வகையில் ஒரு வருடத்திற்கு முன்பாகவே அனைத்து ஏர்லைன்ஸூகளுக்கும் முன்னறிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த தென்புற ரன்வே புதுப்பித்தல் பணிகளுக்காக சுமார் 60,000 டன் தார் (அஸ்பால்ட்), 8,000 மெட்ரிக் டன் காங்கிரீட், 800 கி.மீ நீளத்திற்கான கேபிள்கள், 5,500 ரன்வே விளக்குகள் ஆகியவை நவீன, பொருளாதார, சுற்றுச்சூழலுக்கு ஏதுவான தொழிற்நுட்பத்தின் கீழ் இப்பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Emirates 247 / WAM
தமிழில்:அதிரை நியூஸ்

No comments