புதுசு

துபையில் 2021 ஆம் ஆண்டு முதல் பேப்பர் இல்லா அரசு நிர்வாகம்!
துபை மாநகரை முற்றிலும் அதிநவீன ஸ்மார்ட் சிட்டியாக மாற்றத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் பல்வேறு சேவைகள் ஆன்லைன் வழியாகவே மேற்கொள்ளப்படுகின்றன இதனால் வீண் அலைச்சல், நீண்டகால காத்திருப்புக்கள் விடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் துபை அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட எந்தப் பணிகளும் பேப்பர் மூலம் நடைபெறாது என்றும் ஆவணங்களை பேப்பர்களில் நகலெடுக்கும் தேவை கூட வாடிக்கையாளர்களுக்கோ, ஊழியர்களுக்கோ இருக்காது என்று துபையின் பட்டத்து இளவரசரும் ஆட்சிமன்றக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின்; முஹமது பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் துபை அரசு சார்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் 1 பில்லியன் பேப்பர் செலவினங்கள் முற்றிலும் இல்லாது போகும்.

Source: Gulf News
தமிழில்:அதிரை நியூஸ்

No comments