புதுசு

போலி டாக்டர் போட்ட ஊசியால் உ.பி.,ல் 46 பேருக்கு எய்ட்ஸ்

லக்னோ : உத்தரபிரதேச மாநிலம், உன்னா நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அடுத்தடுத்து பலருக்கு எச்.ஐ.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டது. கடந்த 10 மாதங்களில் 46 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. 

மாநில சுகாதாரத்துறை நடத்திய விசாரணையில், பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராஜேந்திர குமார் என்ற போலி டாக்டர், ஒரே சிரிஞ்ச் மூலம் பலருக்கு ஊசி போட்டதே இதற்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இதுபற்றி விசாரணை நடத்துவதற்காக, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பை சேர்ந்த 3 அதிகாரிகளை உன்னா நகருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. அக்குழுவினர், இன்னும் 2 நாட்களில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று தெரிகிறது.

இதற்கிடையே, ஒரே சிரிஞ்ச் மூலம் பலருக்கு ஊசி போடுவது குற்றச்செயல் என்று இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் கே.கே.அகர்வால் கூறியுள்ளார்.

No comments