புதுசு

உலகின் பெரிய ராக்கெட்டான ஃபல்கான் ஹெவி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

உலகின் பெரிய ராக்கெட்டான ஃபல்கான் ஹெவி ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலோன் மஸ்க்கின் கனவுத் திட்டம் இதுவாகும். உலகிலேயே இதுதான் பெரிய சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும். 18 போயிங் விமானங்களுக்கு இணையான சக்தியும், 747 ஜெட் விமானங்களுக்கு இணையாக வேகமும் கொண்டது. நேற்று இரவு 12 மணிக்கு இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அப்போலோ 11 ஏவப்பட்ட அதே இடத்தில் இருந்து 18,747 ஜெட் வேகத்தில் ஏவப்பட்டு இருக்கிறது.


இவ்வளவு பெரிய சக்தியை உருவாக்க இதில் 27 எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ராக்கெட்டில் சாட்டிலைட்டுக்கு பதிலாக கார் ஒன்று இருக்கிறது. டெஸ்லா நிறுவனத்திற்குச் சொந்தமான 'செர்ரி ரெட் டெஸ்லா' கார் இதில் செலுத்தப்பட்டு உள்ளது. இவ்வளவு பெரிய ராக்கெட் இப்படி பூமிக்கு வெளியே வெற்றிகரமாக ஏவப்பட்டது இதுதான் முதல்முறை ஆகும். இதை தற்போது நாசா, பென்டகன் பயன்படுத்த இருக்கிறது. எதிர்காலத்தில் நிலவிற்கு, செவ்வாய்க்கும் மனிதர்களை அனுப்ப இந்த ராக்கெட் பயன்படுத்தப்பட இருக்கிறது.

No comments