புதுசு

ஷார்ஜா சிறையிலுள்ள பெற்றோர்களுடன் பிள்ளைகள் வீடியோ சாட்டிங் மூலம் பேசும் வசதி அறிமுகம்!ஷார்ஜாவில் சிறையிலுள்ள பெற்றோர்களுடன் பிள்ளைகள் வீடியோ சாட்டிங் மூலம் பேசும் வசதி அறிமுகம்.

ஷார்ஜா எமிரேட்டில் சிறைபட்டுள்ள பெற்றோர்களை பிரிந்துள்ள குழந்தைகளின் மனோநிலை, ஏக்கம் மற்றும் எதிர்காலம் போன்றவற்றை கருத்திற்கொண்டு சிறையிலுள்ள பெற்றோர்களும் அவர்களின் குழந்தைகளும் நேரடி வீடியோ சாட்டிங் வழியாக பேசிடும் வசதியை ஷார்ஜா சிறைத்துறை, போலீஸ், சமூக நலத்துறை மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் கீழ் துவக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சாட்டிங் வசதியின் மூலம் குழந்தைகள் பெற்றோரை பிரிந்திருக்கும் ஏக்க மனநிலை குறைந்து அவர்களுடன் இருப்பது போன்ற சூழலை உணரவும், குழந்தைகள் பெற்றோர்களை சிறைகளில் காண வரும் போது அங்கு காணப்படும் ஜெயில் சூழ்நிலைகள் கண்டு மிரளும் போக்கும் இல்லாது போகும் எனவும் நம்பப்படுகிறது. அதேபோல் குழந்தைகள் நோயுறும் போது பெற்றோர்களின் அரவணைப்பு வார்த்தைகள் அவர்கள் விரைவில் குணபெற உதவும் என்பதாலும் இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிள்ளைகள் பெற்றோர்களுடன் மட்டுமல்ல தங்கள் நேசிக்கும் நெருங்கிய உறவினர்கள் சிறைபட்டிருந்தாலும் அவர்களுடனும் வீடியோ சாட்டிங் வழியாக உரையாடலாம். ஷார்ஜா எமிரேட்டில் தற்போது கீழ்க்காணும் 9 புனர்வாழ்வு மற்றும் சீர்த்திருத்த மையங்களில் (சிறைச்சாலைகள்) இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1. ஷார்ஜா சிட்டி (Sharjah City)
2. அல் ஹம்ரியா (Al Hamriya)
3. அல் தைது (Al Dhaid)
4. அல் பத்தாஹ் (Al Bata'aeh)
5. அல் மதாம் (Al Madam)
6. திப்பா அல் ஹிஸ்ன் (Dibba Al Hisn)
7. மலீஹா (Maliha)
8. கல்பா (Kalba)
9. கொர் பக்கான் (Khor Fakkan)

தமிழில்:adirai
Source: Gulf News

No comments