புதுசு

போரின் வலி தெரிந்த தமிழர்கள் : உலகிலேயே சிரியா போர் பற்றி கூகுளில் அதிகம் தேடல்



உலகிலேயே சிரியாவில் நடக்கும் போர் பற்றி தமிழர்கள்தான் கூகுளில் அதிகம் தேடி இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல் 50 இடங்களில் தமிழகம் தான் அதிக இடங்களை பெற்றுள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.


இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்துள்ளது.சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக இந்த தாக்குதலில் கடந்த 9 நாட்களில் மட்டும் ஏராளமான குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 7 நாட்களில்தான் இதுகுறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்டு இருக்கிறது. முக்கியமாக சிரியா (syria) என்று ஆங்கிலத்திலும், சிரியா தமிழ் (syria tamil) என்றும் அதிகமாக தேடப்பட்டு இருக்கின்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து சிரியா புகைப்படங்கள், வீடியோக்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை, போர் காரணம், சேவ் சிரியா என்று நிறைய விஷயங்கள் தேடப்பட்டு இருக்கிறது.தமிழகத்தில் சிரியா போர் குறித்த தேடலில் ஆவடி முதல் இடம் பிடித்துள்ளது. 3-வது இடத்தில் சென்னையை சேர்ந்த சிறுசேரியும், 5-வது இடத்தில் சென்னையை சேர்ந்த காட்டாங்குளத்தூரும் இருக்கிறது. 8,9,10 ஆகிய இடங்களில் நாகர்கோவில், தஞ்சாவூர் ,மதுரை ஆகிய இடங்கள் இருக்கிறது. இதெல்லாம் உலக அளவில் வந்த இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிரியா போர் குறித்த தேடலில் முதல் 50 இடங்களில் பாதிக்கும் அதிகமான இடங்கள் தமிழகம் தான் உள்ளது.இது குறித்து தேடி படித்ததற்கு நிறைய உளவியல் காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக இலங்கையில் தமிழகர்கள் இனப்படுகொலையில் கொத்துக் கொத்தாக மடிந்தனர்.


 போரின் வேதனை என்ன என்று தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் தமிழர்கள் இது குறித்து அதிகம் தேடி இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் போரை முன்னின்று நடத்தும் ஈராக், ரஷ்யா, அமெரிக்க போன்ற நாடுகள் மிகவும் குறைவாகவே தேடி இருக்கின்றனர். அனைத்து நாடுகளும் 30வது இடத்திற்கு பின்பே இருக்கிறார்கள். முக்கியமாக ரஷ்யா 63-வது இடத்தில் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments