புதுசு

திவாலானதாக அறிவிக்கக்கோரி ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனுஏர்செல் நிறுவனம் திவால் என அறிவிக்கக்கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.15 ஆயிரத்து 500 கோடி கடன் ஏற்பட்டதை அடுத்து திவால் என அறிவிக்க ஏர்செல் கோரிக்கை விடுத்துள்ளது. எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா வங்கிகளிடம் ஏர்செல் நிறுவனம் கடன் பெற்றுள்ளது.


இந்நிலையில் ஏர்செல் நிறுவனம் திவால் என அறிவிக்கக்கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு அளித்துள்ளது.முன்னதாக ஏர்செல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு டவர் பிரச்சினை மீண்டும் வர அதிக வாய்ப்பு என தென்னிந்திய சிஇஓ சங்கர நாராயணன் தகவல் தெரிவித்திருந்தார். ஏர்செல்லுக்கும், டவர் நிறுவனங்களுக்கும் மீண்டும் கருத்து வேறுபாடு என தற்போது தகவல் வெளியானது. ஏர்செல் சேவையில் நாளை முதல் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் வாடிக்கையாளர் வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கூடிய விரைவில் மாறிக்கொள்ளுமாறு ஏர்செல் நிறுவனமே தெரிவித்துள்ளது.செல்போன் டவர் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு வாடகை பாக்கி தராததால் ஏர்செல்லில் சுமார் 8,000 டவர்கள் செயலிழந்தன. இதனால் ஏர்செல் சேவை கடந்த சில தினங்களுக்கு முன் முடங்கியது.

பின்னர் ஏர்செல் நிறுவனம் மேற்கொண்ட முயற்சியால் பெரு நகரங்களில் உள்ள 75 சதவீத டவர்கள் தற்காலிமாக செயல்பட தொடங்கினாலும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகான டவர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.ஆனால் பேச்சுவாரத்தையில் உடன்பாடு எட்டாததால் மீண்டும் செல்போன் டவர் முடங்கும் வாய்ப்பு உள்ளதாக ஏர்செல் நிறுவன தென்மண்டல தலைவர் தெரிவித்துள்ளார்.

ஏர்செல் சிக்கனல் மீண்டும் நாளை முதல் கிடைக்காது என்பதால், வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு உடனடியாக மாறிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஏர்செல் நிறுவனம் திவால் என அறிவிக்கக்கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments