புதுசு

ஈரானின் எண்ணெய் மற்றும் இயற்கை வளத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள தயார்: ஈரான் அதிபர்ஈரானின் எண்ணெய் மற்றும் இயற்கை வளத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி கூறியுள்ளார். ஈரான் அதிபர், ஹாசன் ரூஹானி, மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசவுள்ளார்.


 இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் வழிபாடு நடத்திய பின்னர் பேசிய அவர், ஈரானின் சபஹார் துறைமுகத்தை பயன்படுத்தி கொள்ள இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆப்கன், மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா செல்வதற்கான நுழைவு வாயிலாக இந்த துறைமுகம் இந்தியாவிற்கு திகழும் என்றும் கூறினார். மேலும் ஈரானில் எண்ணெய் மற்றும் இயற்கை வளங்கள் அதிகமாக உள்ளன. இதனை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் இதன் மூலம் அந்நாடு வளர்ச்சி பெறும் என்றும் தெரிவித்தார். உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்கள் கருத்து வேறுபாடுளை மறந்து ஒன்று சேர வேண்டும் என்றும் முஸ்லிம் நாடுகள் ஒற்றுமையாக இருந்திருந்தால், ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்க அமெரிக்காவிற்கு தைரியம் இருந்திருக்காது என்றும் தெரிவித்தார். மேலும் பாலஸ்தீனத்திற்கு முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.

No comments