புதுசு

இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானியர் என அழைப்பவர்களை தண்டிக்க சட்டம் வேண்டும் : ஓவைசி

ஐதராபாத் : இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானியர் என அழைப்பவர்கள் யாராலும் இருந்தாலும் அவர்களை சிறையில் அடைக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என இஸ்லாமிய இயக்க தலைவர் அசாதுதீன் ஒவைசி கோரிக்கை வைத்துள்ளார்.
இஸ்லாமியர்களை இவ்வாறு அழைப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு கேட்டுள்ளார். மேலும் அவர், இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானியர் என்பவர்களை 3 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். ஆனால் பா.ஜ., தலைமையிலான அரசு அத்தகைய மசோதாவை கொண்டு வராது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் முகம்மது அலி ஜின்னாவின் இரு நாட்டு கொள்கையை நிராகரித்துள்ளனர் என்றார்.
லோக்சபாவில் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் உரையாற்ற உள்ளார். அதன் பிறகு ஓவைசி இந்த புதிய சட்டம் கொண்டு வரும் கோரிக்கையை முன்வைக்க உள்ளார். தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் மசோதா பெண்களுக்கு எதிரானது எனவும் ஓவைசி பேசி உள்ளார்.

No comments